நிறுவன அறிமுகம்
நாட்டியர்ப்பணா ஆர்ட்ஸ் அகாடமியின் நிறுவனர் திருமதி. ஆரோக்கிய உதயா. தமிழ்நாடு அரசு இசை கல்லுாரியில், பந்தநல்லுார் பாணியில், 2009 ஆம் ஆண்டு, ஆடற்கலைமணி பட்டம் பெற்றார்.
மேற்கொண்டு குரு தனசுந்தரி அவர்களிடம், நடன ஆசிரியையாக நட்டுவாங்க பயிற்சி பெற்றார். ஆடல் குறித்த பயிற்சி பட்டறை, பலவற்றில் பங்கேற்று சான்றிதழ் பல பெற்றார்.
கடந்த, 2012 ஆம் ஆண்டு, சென்னையில் நாட்டியர்ப்பணா ஆர்ட்ஸ் அகாடமி என்ற நடனப்பள்ளியை துவக்கி, மாணவர்களுக்கு நாட்டியத்தின் அடிப்படை கல்வியில் இருந்து நட்டுவாங்கம் வரை பயிற்று வித்து வருகிறார்.
இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், கின்னஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நாட்டிய சாதனை நிகழ்ச்சியில் இவரது நடன பள்ளி மாணவர்கள் பங்கேற்று சான்றிதழும், பாராட்டும் பெற்றுள்ளனர்.
இது தவிர நவராத்திரி, மகாசிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, வைகுண்ட ஏகாதசி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளிலும் நாட்டியர்ப்பணா ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் பங்கேற்று பரிசினை பெற்றுள்ளனர்.
மேலும், இப்பள்ளி மாணவர்கள் பலர் சலங்கை பூஜை, அரங்கேற்றம் என நாட்டியக் கலையில் படிப்படியாக முன்னேறி வருகின்றனர்.