செய்திகள் சில வரிகளில்
*சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுக்கு பின்னர் அங்குள்ள ஏரி ஒன்று நிரம்பி உள்ளது, ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கிறது
*புதுடில்லியில் வாலிபர் வயிற்றில் உயிருடன் இருந்த கரப்பான்பூச்சியை 10 நிமிடத்தில் மருத்துவர்கள் அகற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது
*போயிங் விமான தொழிற்சாலையில் நடந்து வரும் வேலைநிறுத்தத்திற்கு மத்தியில், 17 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது
*திருவள்ளூர் கவரைப்பேட்டை ரயில் விபத்தை அடுத்து, அக்.,12ம் தேதி 18 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது
*கடந்த ஒரு வாரத்தில், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் டில்லி மற்றும் மும்பையில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
*தொழில் நுட்பக் கோளாறு காரணமாக வானில் பல மணி நேரம் வட்டமடித்த ஏர் இந்தியா விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது
*தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை..!!
*தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம்: மக்களுக்கு அறிவுரை
*ஒசூர் கோட்டத்தில் ரூ.1 கோடியில் தூர்வாரும் பணிக்கு அரசாணை வெளியீடு
*பதற்றமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட விமானிகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
*மதுரை சட்டக் கல்லூரி மாணவருக்கு தமிழ் வழி கல்விச் சான்றிதழ் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
*மோசமான வானிலை: துபாய் – கோழிக்கோடு விமானம் கோவையில் தரையிறக்கம்
*கவரைப்பேட்டை ரயில் விபத்து: மீட்கப்பட்ட பயணிகள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பிவைப்பு
*கவரைப்பேட்டையில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து: 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு